சிறையிலுள்ள சசிகலாவுடன் தினகரன் இன்று அவசர ஆலோசனை- வீடியோ

  • 6 years ago
பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க டி.டி.வி.தினகரன் இன்று பெங்களூர் விரைந்துள்ளார்.
இரட்டை இலை சின்னத்தை பெறும் முயற்சியில் டிடிவி தினகரன் தோல்வியடைந்துள்ளார். இதையடுத்து அவர் தரப்பை சேர்ந்த 5 எம்.பிக்கள் முதல்வர் எடப்பாடி அணிக்கு அணி மாறியுள்ளனர்.
இந்த நிலையில், தினகரன் அணியில் இணைந்ததால், தகுதி நீக்கத்திற்கு உள்ளான எம்.எல்.ஏக்கள் 18 பேரும் படிப்படியாக எடப்பாடி அணிக்கு தாவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.இதனிடையே ஆர்.கே.நகரில் டிசம்பர் 21ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் தினகரன் போட்டியிட்டு அதிமுகவுக்கு் நெருக்கடி கொடுத்தால் பாஜக அவருக்கு நெருக்கடி தரும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏகப்பட்ட வழக்குகளில் சம்மந்தப்பட்ட தினகரனை அடுத்து சிறை அனுப்ப மத்திய அரசு முயற்சி செய்ய தயங்காது என்பது அவருக்கு கிடைத்துள்ள இதையடுத்து, சசிகலாவை சந்தித்து அவர் ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து ஆலோசனை செய்ய தினகரன் அவசரமாக பெங்களூர் புறப்பட்டு சென்றுள்ளார். மீண்டும் தொப்பி சின்னத்தில் போட்டியிடுவது குறித்து அவர் ஆலோசிக்க வாய்ப்புள்ளது. மேலும் அதிமுக அரசுக்கு எதிராக எப்படி வியூகம் அமைப்பது என்பது குறித்தும் சசிகலாவுடன், தினகரன் கலந்து ஆலோசிக்க வாய்ப்புள்ளது.


TTV Dhinakaran rushed to Bengaluru to meet his aunt Sasikala at Parappana Aghrahara jail.

Recommended