சம்பளத்தை கூட்டித் தாங்க முதலாளி..பிசிசிஐயிடம் முறையிடும் கோஹ்லி!- வீடியோ
  • 6 years ago
இந்திய வீரர் கோஹ்லி தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி அளிக்கும்படி பிசிசிஐ அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்காக முறைப்படி விவாதத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். மேலும் அவர் தனக்கு மட்டும் இல்லாமல் இந்திய அணியில் இருக்கும் மற்ற வீரர்களுக்கும் சம்பளத்தை அதிகரிக்கும்படி கூறியுள்ளார். இந்த சம்பளம் குறித்து விவாதிப்பதற்கான கூட்டம் விரைவில் நடக்க இருக்கிறது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்புதான் கோஹ்லி, ரவி சாஸ்திரி ஆகியோரின் சம்பளம் எவ்வளவு என்று தகவல்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

சில நாட்களுக்கு முன் கிரிக்கெட் உலகில் மிகவும் அதிக சம்பளம் வாங்கும் நபர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் கோஹ்லி, டோணி, அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரின் சம்பள விவரங்கள் வெளியிடப்பட்டது. கோஹ்லி 1 மில்லியன் டாலர் வாங்குவதாக கூறப்படுகிறது. ஒரு வருடத்திற்கு ரவி சாஸ்திரி 1.17 மில்லியன் டாலர் சம்பளம் வாங்குகிறார். டோணி 1.1 மில்லியனுக்கும் குறைவாகவே வாங்கி வருகிறார்.

Kohli in the plan to discuss for salary hike. He also asks salary hike for his team mates also. Two weeks ago Indian cricket team coach Ravi Shastri has announced as the world's highest earning cricket coach with salary close to 1.17 million dollars per year. His salary his higher than indian captain Kohli, which is 1 million per year
Recommended