வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலையால் கனமழை - வானிலை மையம்- வீடியோ
  • 6 years ago
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் ஸ்டெல்லா கூறியுள்ளார். தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் விட்டு விட்டு பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் கூறியுள்ளார். சென்னையில் நேற்று காலை முதலே பலத்த மழையும், அவ்வப்போது சாரல் மழையும் விட்டு விட்டு பெய்து வருகிறது. நேற்று மாலை தொடங்கி இரவு வரை விட்டு விட்டு பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.

இதனிடையே இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் ஸ்டெல்லா, சில தினங்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து விட்டதாக கூறினார். அந்த காற்றழுத்த தாழ்வுநிலை அரபிக்கடலுக்கு சென்று விட்டதாகவும் தெரிவித்தார்.

The Meteorological depaetment Assitent Director Stella said that in the next 48 hours heavy rainfall in North TamilNadu.
Recommended