கமல் ரசிகரை அடிக்கவில்லை : பரவும் இன்னொரு ஆங்கிள் வீடியோ!

  • 7 years ago
கமல்ஹாசன் தொடர்பான பரபரப்பான வீடியோ ஒன்று நேற்று சமூக வலைதளங்களில் வெளியானது. சில மணிநேரங்களிலேயே அந்த வீடியோ வைரலாகப் பரவியது. ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு வெளியே வந்த கமலை, இயக்குனரும் நடிகருமான ரமேஷ் அரவிந்த் அழைத்து வருகிறார். கமல்ஹாசன் ரசிகர்கள் கூடி நின்று கோஷம் எழுப்புகிறார்கள். அங்கிருக்கும் படிக்கட்டில் கமல் இறங்கும்போது ஒரு ரசிகர் முண்டியடித்துக் கொண்டு சென்ற கமலின் காலில் விழ முயற்சிக்கிறார். அவரை கமல் அடிப்பது போல அந்த வீடியோவில் பதிவாகியிருக்கிறது. படிக்கட்டில் கமல் இறங்கும்போது ஒரு ரசிகர் முண்டியடித்துக் கொண்டு சென்ற கமலின் காலில் விழ முயற்சிக்கிறார். கோபமுற்ற கமல் அந்த ரசிகரின் கன்னத்தில் அடித்தது போலவும் கோபமாகத் தள்ளிவிட்டது போலவும் வீடியோவில் பதிவாகி இருக்கிறது. இதுகுறித்து கமல் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், "காலில் விழும் கலாச்சாரத்தை அடியோடு வெறுப்பவர் கமல். அதனால் காலில் விழுந்த ரசிகரை அவர் தடுத்தார். போலீஸார் தள்ளிவிட்டிருக்கலாம். கமல் அடித்திருக்க வாய்ப்பில்லை" எனத் தெரிவித்துள்ளார்கள் கமலுக்கு நெருக்கமானவர்கள்.

A video became viral, Kamalhaasan slaps his fan in public. Now, an another video is released on social media that was in another angle. This new video shows kamal didn't slap his fan.

Recommended