நடுவரை கண்டபடி திட்டிய முன்னாள் வங்கதேச வீரர்...கிடைத்த தண்டனை என்ன தெரியுமா?- வீடியோ

  • 6 years ago
முன்னாள் வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் களத்தில் இருந்த நடுவரை விக்கெட் கொடுக்காத காரணத்தால் மிகவும் மோசமாக திட்டி இருக்கிறார். இதற்காக அந்த நடுவர் போட்டி முடிந்த பின் அந்த வீரருக்கு தண்டனை கொடுத்து இருக்கிறார்.
வங்கதேச தலைநகர் டாக்காவில் 'பங்களாதேஷ் பிரிமியர் லீக்' போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நேற்று டாக்கா டைனமிக்ஸ் அணிக்காக விளையாடினார் முன்னாள் வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன்.கோமில்லா விக்டோரியன்ஸ்' என்ற அணிக்கு எதிராக நடந்த இந்த போட்டியில் இவர் வீசிய ஒரு பந்து எல்.பி.டபுள்யூ விக்கெட் போல இருந்தது. இதனால் அவர் நடுவரிடம் முறையிட்டார். ஆனால் நடுவர் அதற்கு விக்கெட் கொடுக்கவில்லை.

இந்த நிலையில் கோவம் அடைந்த வீரர் நடுவரை அதே இடத்தில் கெட்ட வார்த்தைகளால் திட்டி இருக்கிறார். மிகவும் மோசமாக நடுவரிடம் அவர் தனது கோபத்தை வெளிப்படுத்தினார். தற்போது இவரது மோசமான நடத்தை காரணமாக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. போட்டியில் கொடுக்கப்படும் சம்பளத்தில் 50 சதவிகிதத்தை அபராதமாக செலுத்தவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


English summary Former Bangladesh player Shakib Al Hasan fights with umpire after not giving wicket. Umpire fined 50 percent match salary of him.

Recommended