என்ன புவனேஷ்வர்குமாருக்கு கல்யாணமா.. சரி வாங்க கலாய்ப்போம்..வீடியோ

  • 6 years ago
இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஷ்குமார் தனது தோழியை நவம்பர் 23ம் தேதி திருமணம் செய்கிறார். இந்த திருமணம் டெல்லியில் மிகவும் கோலாகலமாக நடக்க இருக்கிறது . இந்த நிலையில் இந்திய வீரர் ஷிகர் தவான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புவனேஷ்வர்குமாரை கலாய்த்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவரிடம் நிறைய கேள்விகளை கேட்டு இருக்கிறார். மேலும் அந்த வீடியோவில் புவனேஷ்வர்குமாரும் இடம்பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தவான் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் புவனேஷ்வர்குமார் நிதானமாக பதில் அளித்தார்.

இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர்குமாருக்கும் நுபுர் நாகர் என்ற பெண்ணுக்கும் கடந்த அக்டாபர் 1ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. இருவரும் பல நாட்களாக நண்பர்களாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிலநாட்களுக்கு முன் இவர்கள் வீட்டில் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டதை அடுத்து அவர் அந்த பெண்ணுடன் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். இந்த நிலையில் இவர்கள் திருமணம் வரும் நவம்பர் 23ம் தேதி நடக்க உள்ளது.

ஸ்விங் பாலில் கலக்கும் புவனேஷ்வர்குமாருக்கு இன்ஸ்டாகிராமில் தவான் நிறைய ஸ்விங் கேள்விகளை கேட்டார். அதில் முக்கியமாக ''நம்ம டீம்ல இப்ப உங்களுக்கு கல்யாணம். இது பற்றி எப்படி பீல் பண்ணுறீங்க. உங்க கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கும்னு நினைக்கிறீங்க'' என்று கேட்டு இருந்தார். அதே வீடியோவில் தவானுக்கு அருகில் புவனேஷ்வர் குமாரும் உட்கார்ந்து இருந்தார்.

Team India pacer Bhuvneshwar Kumar is going to marry his fiancee Nupur Nagar on November 23. Shikhar Dhawan teases Bhuvneshwar Kumar over his marriage in a instagram video.

Recommended