தீபிகாவின் தலைக்கு ரூ. 5 கோடி விலை... கொலை மிரட்டலால் போலீஸ் பாதுகாப்பு- வீடியோ

  • 7 years ago
நடிகை தீபிகா படுகோனேவின் தலைக்கு ரூ.5 கோடி விலை வைத்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பெங்களூருவில் உள்ள வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாலிவுட்டின் பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த ராணி பத்மினியின் கதையை மையமாக வைத்து 'பத்மாவதி' என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படம் டிசம்பர் 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ராணி பத்மினியாக நடிகை தீபிகா படுகோனேவும், அலாவுதீன் கில்ஜியாக நடிகர் ரன்வீர் சிங்கும், மஹரவால் ரத்தன் சிங்காக ஷாஹித் கபூரும் நடித்திருக்கிறார்கள்.

பத்மாவதி படத்தை வெளியிடக்கூடாது என பல அமைப்புகள் படக்குழுவினருக்கு பகிரங்க மிரட்டல் விடுத்து வருகின்றன. பத்மாவதி படம் வெளியாவதை, யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என தீபிகா படுகோனே தெரிவித்திருந்தார். இதனையடுத்து பகிரங்க மிரட்டல்கள் வருகின்றன.

தீபிகாவின் இந்த அதிரடிப் பேச்சுக்காக ராஜபுத்திர கர்னி சேனா என்ற அமைப்பு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது. படம் வெளியாகும் நாளன்று நாடு தழுவிய அளவில் பந்த் நடத்தப்படும் எனவும், சூர்ப்பனகை போல தீபிகாவின் மூக்கை வெட்டிவோம் என்று அறிவித்தனர்.

Recommended