கொல்கத்தா டெஸ்டில் பரபரப்பு... அவுட்டிலிருந்து தப்பிக்க இலங்கை வீரர் செய்த மோசடி!- வீடியோ

  • 6 years ago
இலங்கை கிரிக்கெட் வீரர் தில்ருவான் பெரேரா மோசடி செய்து அவுட் ஆவதில் இருந்து தப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா-இலங்கை அணிகள் நடுவேயான 3 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று 4வது நாள் ஆட்டம் நடைபெற்றது. அப்போது 57வது ஓவரில் இலங்கை வீரர் தில்ருவான் பெரேரா பேட் செய்தபோது, கள நடுவரால் எல்பிடபிள்யூ கொடுக்கப்பட்டது

இதையடுத்து டிஆர்எஸ் எனப்படும் நடுவர் முடிவை மறுபரிசீலனை செய்யும் முறைக்கு போகலாமா என பெரேரா யோசித்தார். எதிர் முனையில் நின்றிருந்த சக பேட்ஸ்மேன் ரங்கனா ஹீரத்திடம் கேட்டார். அவரோ வேண்டாம் என சைகை செய்தார். இதையடுத்து பெவிலியன் நோக்கி திரும்பி நடக்க ஆரம்பித்தார் தில்ருவான் பெரேரா.
தில்ருவான் பெரேரா பெவிலியன் நோக்கி நடந்தபோது, பெவிலியனில் இருந்த சக ஆட்டக்காரர்களில் ஒருவர், ரிவ்யூ செய்யுமாறு சைகை காட்டியதாக தெரிகிறது.

Sri Lankan batsman Dilruwan Perera was given out LBW by the umpire in the 57th over. Perera turned around and was walking back when he suddenly made a u-turn and asked for the DRS (Decision Review System)

Recommended