போயஸ்கார்டன் ரெய்டு, நெட்டிசன்கள் மீம்ஸ்- வீடியோ

  • 7 years ago
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துகள் பதிவிடப்பட்டு வருகிறது. ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் வேதா இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்றிரவு அதிரடி ரெய்டு நடத்தினர். அதிகாலை வரை நீடித்த இந்த ரெய்டில் லேப்டாப், பென்டிரைவ், ஜெயலலிதாவுக்கு வந்த கடிதங்கள் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ஜெயலலிதா வீட்டில் 21ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்பட்ட இந்த ஆய்வுக்குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் சில..

மக்களிடம் கொள்ளையடித்து மன்னார்குடி ஏழைகளுக்கு பகிர்ந்தளித்த லேடி ராபின் ஹூட் வீட்டை இன்சல்ட் பண்ணிடாங்களாமே..

சசிகலா அன்ட் கோ : ஏங்க எங்க குடும்பத்துல மட்டும் ரெய்டு நடத்துறாங்க... தமிழக மக்கள் : அது ஒன்னுமில்லைங்க.. சிடி வித்த பொம்பளைகிட்ட இத்தனை சொத்தான்னு பொறாமைங்க..

Netizens making fun comments on Poes garden raid. Income tax officers raided at Jayalalitha house last night.

Recommended