ஆத்தீ...அஜித்தை தப்பா பேசுனா சோடா பாட்டில் பறக்குமாமே! இந்த பாட்டி கூட அஜித் ரசிகையா..?- வீடியோ

  • 6 years ago
தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித். இவரின் படங்கள் வெளியாகும்போது மிகப்பெரிய ஓபனிங் இருக்கும். அஜித்தின் ஸ்டைலுக்காகவே பலர் அவரது ரசிகர்களாக இருப்பார்கள். அஜித்துக்கு பெரும்பாலும் இளைஞர்கள் தான் ரசிகர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுவது உண்டு. ஆனால் தற்போது வயதான பெண்மணி ஒருவர் நடிகர் அஜித்துக்கு ஆதரவாகப் பேசும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் வயதான பெண்மணி, அஜித் அன்னதானம், ஏழைக் குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகம் எனப் பல உதவிகள் செய்கிறார். மேலும் கொட்டிவாக்கத்தில் இளைஞர் ஒருவருக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவி செய்ததாகவும் கூறியுள்ளார். அஜித்தை பற்றி தவறாகப் பேசினால் சோடா பாட்டில் பறக்கும் என்றும் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்க்கும் அந்தப் பெண்மணி சென்னை வட்டார மொழியில் கோபமாக பேசிவிட்டுச் செல்லும் வீடியோ பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

A video of a old woman who is supporting actor Ajith is going viral. She warns Ajith haters in that video.

Recommended