விஜய் ஆண்டனியும் விஜய் போன்று பூனை மாதிரி இருப்பார்- வீடியோ

  • 6 years ago
விஜய் ஆண்டனி ஒரு பூனை மாதிரி என்று நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார். ஜி. ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் அண்ணாதுரை. படத்தை ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் இணைந்து தயாரித்துள்ளது.

அண்ணாதுரை படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ராதிகா சரத்குமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, விஜய் ஆண்டனி இருக்கும் இடம் தெரியாமல் இருப்பார். பூனை போன்று பதுங்கி இருப்பார். நடிகர் விஜய்யும் அமைதியானவர். திரையில் தான் தான் யார் என்பதை காண்பிப்பார். விஜய் ஆண்டனியும் விஜய் போன்றே திரையில் தான் தன்னை வெளிப்படுத்துவார். பல திறமைகளை தன்னுள் வைத்திருக்கும் விஜய் ஆண்டனி திரையில் தான் தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவார் என்றார்.

ஒவ்வொரு விஷயத்திலும் விஜய் ஆண்டனி தன்னை நிரூபித்து அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து வருகிறார். ஆனால் இதே தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் சரியாக படப்பிடிப்புக்கு வருவதில்லை என தயாரிப்பாளர் சங்கத்துக்கு புகார்கள் வந்திருக்கிறது. ஒரு நடிகர் 29 நாட்கள் மட்டுமே படப்பிடிப்புக்கு வந்திருக்கிறார். எடுத்தவரை ரிலீஸ் செய்யுங்கள் என சொல்கிறார். அந்த நடிகரால் தயாரிப்பாளருக்கு ரூ 18 கோடி நஷ்டத்தில் இருக்கிறது. ஒரு பிரபல காமெடி நடிகரும் அந்த புகாரில் சிக்கி, தயாரிப்பாளர்களைக் காயப்படுத்தி இருக்கிறார். அப்படிப்பட்ட சிலர் இருக்கும் இந்த இண்டஸ்ட்ரியில் விஜய் ஆண்டனி மாதிரி இரவு பகலாக உழைக்கும் நடிகர்களை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் மனதுக்காகவே படம் பெரிய வெற்றி பெறும்," என்றார் ஞானவேல்

Actress cum producer Radhika Sarath Kumar said that Annadurai hero Vijay Antony is a very humble person.

Recommended