என் மகளிடம் அப்படி சொல்ல நீ யாருய்யா?-மல்லுக்கட்டிய அம்மா நடிகை- வீடியோ

  • 7 years ago
கேதர்நாத் பட இயக்குனர் மீது நடிகை அம்ரிதா சிங் கோபமாக உள்ளாராம். பாலிவுட் நடிகை அம்ரிதா சிங்கின் மகள் சாரா அலி கான். அபிஷேக் கபூரின் கேதர்நாத் படம் மூலம் நடிகையாகியுள்ளார். அந்த படத்தில் அவர் சுஷாந்த் சிங் ராஜ்புட் ஜோடியாக நடிக்கிறார். முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் சாராவுக்கு புதுப்பட வாய்ப்பு வந்தது. நடிகை அனுஷ்கா சர்மா தயாரிக்கும் புதுப்படத்தில் ஹீரோயினாக நடிக்குமாறு சாரா அலி கானிடம் கேட்டுள்ளார். இது குறித்து அறிந்த அபிஷேக் கபூர் சாராவுக்கு ஒரு கன்டிஷன் போட்டாராம். முதல் படத்தில் நடித்து முடிக்கும் வரை அடுத்த படத்தில் ஒப்பந்தம் ஆகக் கூடாது என்று அபிஷேக் சாராவிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்ட அம்ரிதாவுக்கு கோபம் வந்துவிட்டது. என் மகளுக்கு வரும் வாய்ப்பை ஏற்க வேண்டாம் என்று நீங்கள் எப்படி சொல்லலாம் என அம்ரிதா சிங் அபிஷேக்குடன் சண்டைக்கு பாய்ந்துள்ளார். ஆனாலும் அபிஷேக் தனது நிலையை மாற்றிக் கொள்ளவில்லையாம்.

Abhishek Kapoor's condition to Sara Ali Khan about signing new movies has left her mom Amrita Singh furious.

Recommended