நான் காந்தியின் பேரன் இல்லை.. ஆனா நீங்க யாரு?...வீடியோ

  • 7 years ago
நான் காந்தியின் பேரன் இல்லை என்று கூறியுள்ள டிடிவி தினகரன் மற்றவர்கள் யார் என்றும் கேட்டு அதிர வைத்துள்ளார். சசிகலாவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகளில் வருமான வரித் துறையினர் கடந்த 3 நாள்களாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று தினகரன் தரப்பினரும், எதிர்க்கட்சியினரும் கூறி வருகின்றனர். அதிகாரிகள் பண்ணை வீட்டில் சோதனை மேற்கொண்ட போது அங்கு சாணியும், உரமும் தான் இருக்கும் என்று தினகரன் நக்கலடித்தார். ஆனால் அங்கு ரகசிய அறைகள் இருப்பதாக சோதனையில் கண்டறிந்ததாக கூறப்படுகிறது.3 நாள்களாக நடைபெற்று வரும் சோதனை குறித்து டிடிவி தினகரன் கூறுகையில் எனது புதுவை பண்ணை வீட்டில் ரகசிய அறைகள் உள்ளதாக கூறப்படுவது பொய்யான தகவலாகும். சேகர் ரெட்டியை உருவாக்கியவர்கள் வீட்டில் ஏன் சோதனையில்லை.கடந்த 3 நாள்களாக தொடரும் இந்த மெகா சோதனை ஏன் என்று தெரியவில்லை. 1800 அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை என்பதெல்லாம் தவறான தகவலாகும். நாங்கள் பெரிய கட்சி இல்லை.
நான் காந்தியின் பேரன் இல்லை. சாதாரண மனிதன்தான். அதேசமயம், என் மீது குற்றம்சாட்டுபவர்கள் என்ன காந்தியின் பேரன்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

TTV Dinakaran says that he is not Gandhi's grand son and at the same time the others who are accusing us are also not Good guys.

Recommended