டிடிவி வீட்டுக்குள் சென்ற அதிகாரிகள், புகழேந்தி வீட்டிலும் சோதனை- வீடியோ

  • 7 years ago
அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள், போலீசார் வந்த நிலையில் அங்கு திரண்ட ஆதரவாளர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
அதிமுக அம்மா அணி பொதுச்செயலாளர் சசிகலாவின் உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகள் உள்பட 190 இடங்களில் வருமானவரித்துறையினர் காலை முதல் வருமான வரி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக சசிகலா தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

சசிகலா குடும்பத்தை சேர்ந்த பலரது வீடுகளில் தமிழகத்தில் ஐடி ரெய்டு காலை முதல் நடைபெறுகிறது. அதேபோல பெங்களூரிலுள்ள அதிமுக கட்சி கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி வீட்டிலும் ஐடி ரெய்டுகள் நடக்கின்றன.
கர்நாடக மாநில அதிமுக செயலாளராக இருப்பவர் புகழேந்தி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் ஜாமீன் பெற்றபோது, அவருக்காக தனது சொத்துக்களை பிணையமாக வைத்தவர் இவர்.

Sasikala supporters raised slogans against Modi Where IT raid is going inside TTV Dinakaran residence and they also accusing that centre is threatening Sasikala and family by using income tax department.

Recommended