கேரளாதான் பிடிக்கும் என்றால் கமல் ஹாஸன் அங்கேயே போய்விடலாம்!-

  • 7 years ago
தமிழகத்தை விட கேரளாதான் பிடிக்கும் என்றால் கமல் ஹாஸன் அங்கேயே போய்விடலாம் என்று நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர் கூறியுள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் எஸ்வி சேகர் கூறுகையில், "கமல் ஹாஸன் ஒரு மூன்றாம் தர அரசியல்வாதி மாதிரி நடந்து கொள்கிறார். கேரள முதல்வர் கேள்வி கேட்க, அதற்கு இவர் வார இதழ் ஒன்றில் பதில் கூற.. எல்லாமே நகைச்சுவையாக உள்ளது.இந்து தீவிரவாதம் என்பது கமல் ஹாஸனின் கற்பனை. வேறொன்றுமில்லை. ஹாஸன் என்று பெயர் வைத்திருப்பதாலோ என்னமோ அவருக்கு இந்துக்களுக்கு எதிரான மனப்பான்மை வந்துவிட்டது போலிருக்கிறது.கமல் ஹாஸன் கேரளாவுடன் தமிழகத்தை ஒப்பிட்டுப் பேசும் அளவுக்கு எல்லாம் தமிழகம் தாழ்ந்துபோய்விடவில்லை. அப்படி கமலுக்கு கேரளாதான் பிடிக்கும் என்றால் அவர் கேரளாவிலேயே போய் வாழட்டும். சிலருக்கு சில விஷயங்கள் சிறு வயதிலிருந்து பிடிக்காமல் இருக்கலாம். அதற்காக அவை தவறு என்று ஆகிவிடுமா என்ன?

Actor SV Shekar strongly condemned Kamal Haasan for his comments against Hindu religion.

Recommended