சென்னை நகரில் கொட்டி தீர்க்கும் மழை- வீடியோ

  • 7 years ago
சென்னையில் நேற்று அதிகாலை முதல் கொட்டி தீர்த்து வருகிறது மழை. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன் வெள்ள நீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.

இலங்கை அருகே வளி மண்டல மேலடுக்கு சுழற்ச்சி நீடிப்பதால் நேற்று அதிகாலை முதல் கடலோர மாவட்டங்களிலும் சென்னையிலும் மழை வெளுத்து கட்டி வருகிறது. சென்னையில் அண்ணாசாலை, நந்தனம், திநகர், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழையின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர். தொடர்ந்து மழை பெய்ததால் அலுவலகம் செல்வோர்கள் மதிய வேளையில் தான் செல்லவும் நேரிட்டது. நேற்று இரவு பலத்த இடி மின்னலுடன் மழை கொட்டி தீர்த்தது.

இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் சாரல் மழையாக ஆரம்பித்து கன மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மழையின் காரணமாக 9 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வரும் இரண்டு நாட்களுக்கு கன மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை நகரில் வெள்ள அபாய எச்சரிக்கை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. மழை நீர் சூழும் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Dis : The rainy season overlaps in Sri Lanka near Chennai

Recommended