இன்றும் நாளையும் தமிழ்நாட்டில் மழை பெய்யுமா?- வீடியோ

  • 7 years ago
வடகிழக்குப் பருவமழையின் தொடக்கமாக சென்னையிலும் திருச்சியிலும் காலை முதலே பலத்த மழை பெய்தது. காலையிலேயே ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

தியாகராய நகர், சைதாப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்தது. அரைமணிநேரம் பெய்த பலத்த மழையால் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்தது. தென்மேற்கு பருவமழை நிறைவடைந்ததையொட்டி, வடகிழக்கு பருவமழை கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், வடகிழக்கு திசை காற்று தமிழகத்தில் முழுமையாக வீசாததால் பருவமழை தொடங்குவது தாமதம் ஆனது. வழக்கமாக நமது நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ஆ தேதி துவங்கி விடும். ஆனால் இந்த ஆண்டு ஒருவார காலம் தாமதமாக அக்டோபர் 26ஆம் தேதி தான் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. இருப்பினும் வடகிழக்கு பருவமழை இன்னும் தீவிரமடையவில்லை.

Chennai's real monsoon spells will start on 29th night or 30th October. Till then it will be hot, sunshine and then occassional showers.

Recommended