P03 Seeman 2 March 2016 Pressmeet at Election Symbol Introduction

  • 8 years ago
Seeman 20160302 Pressmeet at Election Symbol Introduction

Seeman Pressmeet at Election Symbol Introduction 2 March 2016

சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு – தேர்தல் சின்னம் அறிமுகம் 2 மார்ச் 2016

தமிழக சட்டசபை தேர்தலில் ‘நாம் தமிழர்’ கட்சி, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும், தனித்து போட்டியிடப்போவதாக ‘நாம் தமிழர்’ கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து, வேட்பாளர்கள் பட்டியலையும் ஏற்கனவே வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து சென்னையில் சீமான் இன்று அளித்த பேட்டியில், நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. கட்சிக்கு, இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் கிடைத்துள்ளது. இந்த சின்னத்தில் நாம் தமிழர் போட்டியிடும். அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும், கொள்கை என்று ஒன்று கிடையாது. நாம் தமிழர் மாற்றாக இருக்கும். இவ்வாறு சீமான் தெரிவித்தார். முன்னதாக, நிகழ்ச்சியொன்றில் பேசிய சீமான், சட்டசபை தேர்தலில், மக்கள் நல கூட்டணியைவிட நாம் தமிழர் கட்சி அதிக வாக்குகளை பெறாவிட்டால், கட்சியை கலைத்துவிட்டு, கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துவிடுகிறேன் என சவால் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாம் தமிழர் கட்சி தேர்தல் சின்னம் அறிமுகம்

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் சின்னத்தை இன்று வெளியிட்டார் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

நாம் தமிழர் கட்சிக்கு புலி கொடியை ஒதுக்கியவர்கள் புலி சின்னத்தைத் தர மறுத்து விட்டதாக சீமான் தெரிவித்தார். அடுத்து காளை சின்னமும் தரப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

கடைசியாக இரட்டை மெழுகுவர்த்தி நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்துள்ளது என்றும் இத்தனை நாட்காளாக எங்களது உள்ளத்தில் எரிந்த தீ இப்போது சின்னத்தில் எரிகிறது என்று விளக்கம் அளித்தார் சீமான்.,

அதோடு மெழுகுவர்த்தி தம்மையே வருத்திக்கொண்டு ஒளி தருவது போன்ற நாம் தமிழர்கள் கட்சியின் தியாகத்தை சின்னம் பிரதி பலிக்கிறது என்று சீமான் கூறியுள்ளார்.

தமிழ் கேட் மற்றும் தமிழ் அம்மா இடையேயான ஒப்பந்தம் இந்த காணொளிகளை வடிவமைத்தது “ தமிழ் அம்மா ” ( www.TamilAmma.com ) குழு. தமிழ் அம்மா குழுவானது நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்களை உள்ளடக்கியது ஆகும். தமிழ் அம்மா குழு வடிவமைத்த காணொளிகளை, இணயதளம் ம

Recommended