கடலூர் வேட்பாளராக நிற்கிறார் சீமான் | Seeman contesting from Cuddalore Constituency for 2016 MLA / Tamil Nadu State Assembly Election – 13 February 2016

  • 8 years ago
கடலூர் வேட்பாளராக நிற்கிறார் சீமான் | Seeman contesting from Cuddalore Constituency for 2016 MLA / Tamil Nadu State Assembly Election – 13 February 2016

234 வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம், கடலூர் – 13 பெப்ரவரி 2016 | Naam Tamilar Katchi Candidate Introduction Pothukoottam / Meeting, Cuddalore – 13 February 2016

எங்கள் திருநாட்டில் எங்கள் நல் ஆட்சியே’ என்ற பொது முழக்கத்துடன் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட இருப்பதாகவும், வேட்பாளர்களை கடலூரில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிமுகம் செய்ய உள்ளதாகவும் சீமான் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் தீய ஆட்சிமுறை ஒழிய, தூய ஆட்சி முறை மலர, பணநாயகத்தை ஒழித்து ஜனநாயகம் காக்க ‘எங்கள் திருநாட்டில் எங்கள் நல் ஆட்சி’ என்ற பொது முழக்கத்துடன் நாம் தமிழர் கட்சி எந்த கூட்டணியிலும் சேராமல் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.

‘மாற்றம் என்பது சொல் அல்ல! செயல்’ என்று உலகிற்கு உணர்த்தும் வகையில் நாம் தமிழர் கட்சி இந்த சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. பெண்களுக்கு அதிக அளவில் இடங்களை ஒதுக்கி உள்ளதுடன், சிறுபான்மை சமுதாயத்தவர்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுத்தொகுதியிலும் ஆதி குடிமக்கள் அதிக அளவில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

234 வேட்பாளர்களில் 42 பெண்களும், ஒரு திருநங்கையும் வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 234 வேட்பாளர்களும் கடலூர் மஞ்ச குப்பம் மைதானத்தில் நாளை(இன்று) நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட உள்ளார்கள்.

அரசியலுக்கு பணம் தேவையில்லை மனம் இருந்தால் போதும். புரட்சி பணத்தில் இருந்து வருவதில்லை மனதில் இருந்து தான் வரும். தமிழகத்தில் பணத்தை வாங்கிக் கொண்டு ஓட்டளிக்கும் மக்கள் 25 சதவீதம் பேர் தான் உள்ளனர். அவர்களை தவிர்த்து புதிதாக வாக்களிக்க வரும் படித்த இளைஞர்களையும், தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற தயங்கும் வசதி படைத்தவர்களையும் நாங்கள் கவர்ந்து அவர்களை எங்களுக்கு வாக்களிக்க வைப்போம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவசத்தை ஒழித்து இலவசம் பெறாத நிலைக்கு மக்களை மாற்றுவோம். ஆடு, மாடு மேய்ப்பதை அரசு வேலையாக்குவோம். படித்தவர்கள் மட்டுமின்றி படிக்காதவர்களுக்கும் அரசு வேலை வழங்குவோம். மாநில தலைநகரை சென்னை, திருச்சி, கோவை, மதுரை, கன்னியாகுமரி ஆகிய 5 இடங்களுக்கு கொண்டு வந்து அதிகாரத்தை பகிர்ந்தளிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

234 வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகம் மாபெரும் பொதுக்கூட்டம்
அறிமுக உரை – செந்தமிழன் சீமான்
நாள்: 13-02-2016 – சனிக்கிழமை
இடம் : கடலூர்

நேரலை – சீமான் பேச்சு 234 வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம், கடலூர் – 13 பெப்ரவரி 2016 | Live – Seeman Speech & Naam Tamilar Katchi Candidate Introduction Pothukoottam / Meeting Cuddalore – 13 February 2016

தாத்தாவும் ஆத்தாவும் ஓய்வு எடுக்கட்டும். தமிழர்கள் நாம் ஆழ்வோம் நம் நிலத்தை. – என் அண்ணன் சீமான்


தமிழ் கேட் மற்றும் தமிழ் அம்மா இடையேயான ஒப்பந்தம் இந்த காணொளிகளை வடிவமைத்தது “ தமிழ் அம்மா ” ( www.TamilAmma.com ) குழு. தமிழ் அம்மா குழுவானது நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்களை உள்ளடக்கியது ஆகும். தமிழ் அம்மா குழு வடிவமைத்த காணொளிகளை, இணயதளம் மற்றும் சமுக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து பகிர தமிழ் கேட் உதவி செய்து வருகிறது. குறிப்பு : தமிழ் கேட் ( www.TamilCat.com ), தமிழ் அம்மா குழுவிற்கு செய்துவரும் இணைய தள வேலையை எந்த ஒரு அரசியல் மற்றும் அரசியல் சாராத அமைப்புகளுக்கும் தமிழ் கேட் செய்ய தயாராக உள்ளது. மேலும் யாருக்கேனும் விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ள ( tamiltomcat@gmail.com ). முக்கிய குறிப்பு தமிழ் கேட் குழுவை பற்றி : தமிழன் சீமான் வீடியோஸ் வேலை செய்து வந்த குழு, தமிழன் சீமான் வீடியோஸ் .காம் -ல்( www.tamilanseeman videos.com ) செய்துவந்த வேலைகளை நிறுத்திவிட்டு, தமிழ் கேட் .காம் ( www.tamilcat.com ) என்ற பொதுத்தளத்தை உருவாக்கி உள்ளது. பொது தளம் என்றால் என்ன என்று எல்லாருக்கும் ஒரு சந்தேகம் எழலாம் . பொது தளம் என்பது.....................மேலும் படிக்க - http://tamilcat.com/?p=17402 Agreement between Tamil Cat & Tamil Amma This video was edited by “Tamil Amma Team ( www.TamilAmma.com )”. The Team of Tamil Amma are Naam Thamizhar Katchi supporters. The Team of Tamil Amma has sought the help of “Tamil Cat” to upload & share the videos of Tamil Amma on Websites and Social Media sites like Facebook, Twitter, etc., Note: Tamil Cat is ready to do the same job for any political or nonpolitical organizations. If interested please do contact us at tamiltomcat@gmail.com Important Note About Tamil Cat Team: The team that worked for Tamilan Seeman Videos had stopped the works at www.TamilanSeemanVideos.com. The team that worked for “Tamilan Seeman Videos” has started a Neutral Domain OR Neutral Website by name www.TamilCat.com. Many of them may wonder what is Neutral Domain or Neutral Website. Neutral Domain or Neutral Website means it is a website.........To Read More http://tamilcat.com/?p=17402

Recommended